மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு


மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு
x

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

சேலம்

மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் தேவைக்கு ஏற்ப திறந்து விடப்பட்டு வந்தது. இந்த தண்ணீர் திறப்பு நேற்று முன்தினம் மாலையில் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக நேற்று காலை முதல் வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 971 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 103.74 அடியாக இருந்தது.


Next Story