நகைகளின் தொன்மையை அரசு வெளியிட வேண்டும்


நகைகளின் தொன்மையை அரசு வெளியிட வேண்டும்
x

திருவாரூர் தியாகராஜர் கோவில் நகைகளின் தொன்மையை அரசு வெளியிட வேண்டும் என்று ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கூறினார்.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூர் தியாகராஜர் கோவில் நகைகளின் தொன்மையை அரசு வெளியிட வேண்டும் என்று ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கூறினார்.

நகைகளின் ெதான்மை

திருவாரூரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமாக 25 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான நகைகள் 1959-ம் ஆண்டு பதிவின்படி ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்து 700 என கணக்கிடப்பட்டு உள்ளது. தற்போது அதன் மதிப்பு 100 மடங்கு அதிகமாகி ரூ.4 கோடியாக உள்ளது.இந்த நகைகள் தொன்மையானது என்று நிரூபிக்கப்பட்டால் இதன் மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி ஆகும். நகைகளின் தொன்மையை அரசு வெளியிட்டு அதன் மதிப்பை நிர்ணயம் செய்ய வேண்டும்.

முக்கிய சாட்சிகள் மரணம்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் என்ற இடத்தில் ரூ.64 கோடி மதிப்புள்ள விக்கிரகங்கள் திருட்டு போயிருந்தன. அதில் ரூ.48 கோடி மதிப்பிலான விக்ரகங்களை நான் கண்டுபிடித்தேன். இது குறித்து நாங்கள் எழுதிய கடிதம் தெளிவாக இல்லை என்று திருப்பி அனுப்பி 3 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய வழக்கை தற்போது வரை இழுத்தடிக்கிறார்கள்.வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதால் முக்கிய சாட்சிகள் மரணம் அடைந்து விடுகிறார்கள். இதனால் அந்த வழக்கு நீர்த்துப்போகிறது. 3 மாதத்தில் முடிய வேண்டிய வழக்கை 18 வருடங்களாக இழுத்தடிக்கிறார்கள்.

பதிவு செய்ய வேண்டும்

3 லட்சத்து 50 ஆயிரம் தெய்வ விக்கிரகங்களை பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம். ஆனால் அரசு இதுவரை பதிவு செய்யவில்லை. இந்த விக்கிரகங்கள் திருட்டு போய் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டால் பதிவு செய்யாத காரணத்தால் இவற்றிற்கு உரிமை கொண்டாட முடியாத நிலை ஏற்படும்.25 ஆயிரம் விக்கிரகங்கள் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை திரும்ப எடுத்து கோவிலுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story