11 பேருக்கு நிவாரண தொகை


11 பேருக்கு நிவாரண தொகை
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்ட 11 பேருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. தொடர் மழையால் பொதுமக்கள் வசிக்கும் வீடுகள் இடிந்து விழுந்து வருகின்றன. இதனால் பாதுகாப்பாற்ற நிலையில் வசிக்கும் மக்கள் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குன்னூர் கன்னி மாரியம்மன் கோவில் தெரு, இந்திரா நகர் பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால், வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதம் அடைந்தன.

குன்னூர் பகுதியில் மழையால் வீடு இடிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நிவாரணத்தொகை வழங்கும் நிகழ்ச்சி குன்னூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குன்னூர் ஆர்.டி.ஓ. புஷ்ணகுமார் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட 11 பேருக்கு ரூ.4,100 வீதம் மொத்தம் ரூ.45 ஆயிரத்து 100 நிவாரண தொகையாக வழங்கினார். அப்போது தாசில்தார் சிவக்குமார் உடனிருந்தார்.


Next Story