நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும்


நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என விஜயபிரபாகரன் கூறினார்.

மயிலாடுதுறை

பொறையாறு:

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என விஜயபிரபாகரன் கூறினார்.

சாமி தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி்ெபற்ற சிவாலயங்களுள் ஒன்றான இக்கோவிலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் நடிகர் சண்முக பாண்டியன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.அவர்கள் இருவருக்கும் கோவில் அர்ச்சகர்கள் கணேச குருக்கள், மகேஷ்வர குருக்கள் ஆகியோர் மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி பிரசாதங்களை வழங்கினர்.

நெற்பயிர்களை பார்வையிட்டார்

இதைத்தொடர்ந்து விஜயபிரபாகரன், திருக்கடையூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டார். அவரிடம் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ராமமூர்த்தி மற்றும் விவசாயிகள் அழுகிய பயிர்களை காண்பித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.அப்போது விஜயபிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரவேற்பு

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகாக்களுக்கு நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, குத்தாலம் தாலுகாக்களுக்கும் நிவாரண தொகையை அறிவிக்க வேண்டும். சென்னை, மயிலாடுதுறை உள்பட மழை பாதித்த மாவட்டங்களில் தமிழக அரசு மேற்கொண்ட மீட்பு பணிகளுக்கு தே.மு.தி.க. வரவேற்பு தெரிவிக்கிறது. உடனடியாக அனைவருக்கும் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story