2 குடும்பத்தினருக்கு நிவாரண உதவி
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 2 குடும்பத்தினருக்கு நிவாரண உதவியை லட்சுமணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவந்தாடு காந்திநகர் பகுதியை சேர்ந்த குப்பு, பொடுவு ஆகியோரின் கூரை வீடுகள், கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. இதையறிந்ததும் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. மாநில மருத்துவ அணி இணைச் செயலாளருமான டாக்டர் இரா.லட்சுமணன், அப்பகுதிக்கு நேரில் சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 2 குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண உதவியை வழங்கினார். அப்போது கண்டமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் வாசன், கண்டமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், தாசில்தார் வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், மாவட்ட பிரதிநிதிகள் சரவணன், முருகன், ஒன்றிய துணை செயலாளர் ராஜசேகர், கிளை நிர்வாகிகள் நடராஜன், வெங்கடேசன், கோபால், பலராமன், சங்கர், கஜேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.