தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரண உதவி


தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரண உதவி
x

வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரண உதவியை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக கடந்த 23-ந் தேதி அனுமன் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது பணகுடியில் இருந்து கொமந்தான் ஊருக்கு செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளத்தை கடக்க முயன்ற தொழிலாளி இசக்கிமுத்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு, கொமந்தானில் உள்ள இசக்கிமுத்துவின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் இசக்கிமுத்துவின் மகள்கள் இசக்கியம்மாள், முத்து துரைச்சி ஆகியோருக்கு தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கினார். மேலும் அவர்களின் உயர்கல்வி செலவையும் ஏற்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சேரன்மாதேவி உதவி கலெக்டர் சபிர் ஆலம், ராதாபுரம் தாசில்தார் வள்ளிநாயகம், பணகுடி பேரூராட்சி தலைவி தனலட்சுமி தமிழ்வாணன், கிராம நிர்வாக அலுவலர்கள் இசக்கியப்பன், செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story