சாலை விபத்தில் பாதிப்படைந்தவா்களுக்கு நிவாரண நிதி
சாலை விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரண நிதியை சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் வழங்கினார்.
சிவகாசி
சாலை விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரண நிதியை சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் வழங்கினார்.
நிவாரண நிதி
விருதுநகர் மாவட்டத்தில் சாலை விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் கலந்து கொண்டு விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்கினார். அதன்படி சிவகாசி கோட்டத்துக்கு உட்பட்ட சிவகாசி தாலுகாவில் வசித்து வந்த ஆறுமுகச்சாமி என்பவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து அவரது மனைவி தேவிக்கு, சாலை விபத்து நிவாரண நிதியாக அரசு சார்பில் ரூ..1 லட்சம் வழங்கப்பட்டது.
இதே போல் சாலை விபத்தில் இறந்த வெள்ளூர் அழகர்சாமி, சிவகாசி சின்னத்தாய், விளாம்பட்டி குருமுத்து, வெற்றிலையூரணி குருசாமி, நாரணாபுரம் ரோடு மணிகண்டன், ஊராம்பட்டி துரைப்பாண்டி, செங்கமல நாச்சியார்புரம் பெருமாள் ராஜ், சித்துராஜபுரம் பிரிதிவிராஜ் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சமும், பேராபட்டியை சேர்ந்த கிஷோர்கண்ணன் குடும்பத்துக்கு முதல்-அமைச்சரின் சாலை விபத்து நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரமும், மாரனேரி வீரப்பெருமாளுக்கு ரூ.30ஆயிரமும், அனுப்பன்குளம் ரெங்கசாமிக்கு ரூ.50 ஆயிரமும், கிளயம்பட்டியை சேர்ந்த சரவணக்குமாருக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவை சேர்ந்த இடையல்பொட்டல்பட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி சாலை விபத்தில் இறந்ததை தொடர்ந்து அவரது மனைவி தனலட்சுமிக்கு ரூ.1 லட்சமும், இனாம்கரிசல்குளம் ஆறுமுகம் மனைவி ராஜேஸ்வரிக்கு ரூ.1 லட்சமும், காயம் அடைந்த அபிக்கு ரூ.50 ஆயிரமும், முனீஸ்வரனுக்கு ரூ.50 ஆயிரமும், செல்லப்பாண்டிக்கு ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டது.
ராஜபாளையம் தாலுகாவை சேர்ந்த ஜெயவேல் என்பவர் சாலை விபத்தில் இறந்ததை தொடர்ந்து அவரது மகன் கார்த்திகேயனுக்கு ரூ.1 லட்சமும், ராமர் என்பவரின் குடும்பத்தை சேர்ந்த சுப்புலட்சுமிக்கு ரூ.1 லட்சமும், இருளாண்டி என்பவரின் வாரிசுகளுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது. சாலை விபத்தில் காயம் அடைந்த செல்வம் என்பவரின் மகள் சிந்து என்பவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
வத்திராயிருப்பு தாலுகாவை சேர்ந்த கவியரசு என்பவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து அவரது தந்தை கண்ணனிடம், சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.