தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி


தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி
x
தினத்தந்தி 14 May 2023 12:30 AM IST (Updated: 14 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

மின்னல் தாக்கி இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி சோலை ராஜ். இவர் கடந்த 9-ந் தேதி காட்டு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி பலியானார். இந்த நிலையில், அவரது குடும்பத்தினரை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சந்தித்து முதல்-அமைச்சர் பேரிடர் நிவாரண நிதி ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்.

அப்போது, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார் மற்றும் பலர் உடன் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.



Next Story