குளத்தை புனரமைக்கும் பணி
குளத்தை புனரமைக்கும் பணி
காங்கயம்
காங்கயம் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் பதுமன் குளம் புனரமைக்கும் பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
குளம் ஆய்வு
காங்கயம் நகராட்சியில் புதுமன் குளம் உள்ளது. இந்த குளம் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.4 கோடி மதிப்பில் புனரமைப்பு பணி நடக்கிறது. இந்த பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். நகராட்சி நிர்வாகத்துறை சிறப்பாக மக்கள் உடல்நலம் மற்றும் நோய் தடுப்பு, குடிநீர் வழங்கல், தெரு விளக்கு வசதி மற்றும் கல்வி மேம்பாடு, கட்டிடங்கள் மற்றும் கட்டுவதை ஒழுங்கு செய்தல், தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுத்துவதை உரிமம் வழங்கி முறைப்படுத்துதல், பிறப்பு இறப்பு பதிவு, மயானங்களை ஏற்படுத்தி பராமரித்தல், சாலை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் பராமரித்தல், பூங்காக்கள் மற்றும் கட்டிடங்கள் பராமரிப்பு மாநில, மத்திய அரசுகளின் திட்டங்கள், மற்றும் வாரச்சந்தை மேம்படுத்துதல் மற்றும் அடிப்படை வசதிகளான சாலைகள் அமைப்பது, தெரு விளக்குகள், குடிநீர் வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை செயல்படுத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் காங்கயம் நகராட்சி 18 - வது வார்டு அகிலாண்டபுரத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் பதுமன் குளம் புனரமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பூங்கா
இந்த குளத்தினை தூர்வாரி குளத்தினை சுற்றியுள்ள கரைகளை கான்கீரிட் சுவர் கொண்டு பலப்படுத்தும் பணிகள், குளத்தினை சுற்றிலும் மின் விளக்குகள் அமைத்தும், கம்பிவேளிகள், சுற்றிலும் பேவர் பிளாக் சாலைகள் அமைத்தும், குளத்தின் முகப்பு பகுதியில் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல்கள் அமைக்கப்படவுள்ளது. மேலும் கழிப்பிடங்கள், வாகனங்கள் நிறுத்தம், காவலர் அறைகள் அமைக்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.