காவேரிப்பட்டணத்தில்தென்பெண்ணை ஆற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள் அகற்றம்
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து காவேரிப்பட்டணம் உள்ளிட்ட கிராமங்களின் உள்ள விவசாய நிலங்களுக்கு கிருஷ்ணன் கால்வாய் வழியாக தண்ணீர் செல்கிறது. இதனால் 3000 ஏக்கர் விவசாய நிலம் பயன் பெற்றது. இதனிடையே தென்பெண்ணை ஆற்று கால்வாய்களில் ஆகாயத்தாமரைகள் முளைத்து ஆக்கிரமித்து இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் ஆகாயத்தாமரை களை அகற்ற வேண்டு்ம் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றை ஆக்கிரமித்து இருந்த ஆகாயத்தாமரைகள் மற்றும் கழிவுகளை அகற்றினர்.
Related Tags :
Next Story