வாய்க்காலில் ஆகாய தாமரைகள் அகற்றம்


வாய்க்காலில் ஆகாய தாமரைகள் அகற்றம்
x

வாய்க்காலில் ஆகாய தாமரைகள் அகற்றம்

நாகப்பட்டினம்

தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளில் குறுவை சாகுபடி செய்ய முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. வயல்களில் நேரடி நெல் விதைப்பு பணிகள் செய்யப்பட்டு தண்ணீர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது. ஓரடியம்புலம் முதல் வாட்டாக்குடி வரை குறுவை சாகுபடிக்கு தண்ணீர் செல்வதற்கு தடையாக வாய்க்கால்களில் ஆகாயதாமரைகள் மண்டி கிடந்தன. இதனை அறிந்த பொதுப்பணித்துறையினர் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல தடையாக இருந்த ஆகாய தாமரைகளை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றினர். இந்த பணியினை வாட்டாக்குடி ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.


Next Story