சாலையோரம் அனுமதி இ்ன்றி வைத்திருந்த பேனர்கள் அகற்றம்


சாலையோரம் அனுமதி இ்ன்றி வைத்திருந்த பேனர்கள் அகற்றம்
x
தினத்தந்தி 12 Jun 2023 12:30 AM IST (Updated: 12 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் சாைலயோரம் வைத்திருந்த பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

திண்டுக்கல்

விளம்பர பேனர்கள் அகற்றம்

பழனி பகுதியில் காற்று பலமாக வீசி வருவதால் சாலையோரம் வைக்கப்பட்ட பேனர்கள் சேதமடைந்து கீழே விழும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைக்க கூடாது எனவும், மீறி வைத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பழனியில் சாலையோர விளம்பர பேனர்கள் அகற்றும் பணி நகராட்சி சார்பில் நடந்தது.

அதில் வேல் ரவுண்டான, மயில் ரவுண்டானா, ஆர்.எப்.ரோடு ஆகிய பகுதிகளில் வைத்திருந்த விளம்பர பேனர்கள், தட்டிகளை ஆணையர் (பொறுப்பு) வெற்றிசெல்வி தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றினர்.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, பழனியில் இன்று (நேற்று) மட்டும் 20-க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. இன்றும் (திங்கட்கிழமை) பேனர்கள் அகற்றும் பணி நடைபெற உள்ளது. மேலும் வரக்கூடிய 2 மாதங்கள் காற்று அதிகமாக வீசும் காலம். எனவே நகரில் பேனர் வைக்க அனுமதி வழங்கப்படமாட்டாது. அதையும் மீறி யாரேனும் பேனர் வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story