ஈரோடு மாநகர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் அகற்றம்


ஈரோடு மாநகர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் அகற்றம்
x

ஈரோடு மாநகர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.

ஈரோடு

ஈரோடு மாநகர் பகுதியில் அனுமதியின்றி ஏராளமான விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை கண்டறிந்து உடனடியாக அகற்றக்கோரியும், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரனுக்கு தொடர்ந்து புகார் வந்தன. இதைத்தொடர்ந்து அவர், மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசியல் கட்சியினர் பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்றிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், ஈரோடு மாநகரில் நேற்று காலை முதல் மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் தூய்மை பணியாளர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர தட்டிகள், பிளக்ஸ் பேனர்களை அகற்றினர்.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகே மேம்பாலத்தின் சுவற்றில் அரசியல் கட்சி சார்பில் ஒட்டப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் சிறிய ரக கிரேன் வாகன உதவியுடன் அகற்றப்பட்டன. விளம்பர பேனர்கள் அகற்றும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story