அனுமதியின்றி நிறுவ முயன்ற பா.ஜனதா கொடி கம்பம் அகற்றம்
வாணியம்பாடி அருகே அனுமதியின்றி நிறுவ முயன்ற பா.ஜனதா கொடி கம்பம் அகற்றப்பட்டது.
திருப்பத்தூர்
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே அனுமதியின்றி நிறுவ முயன்ற பா.ஜனதா கொடி கம்பம் அகற்றப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் பகுதியில் ஊராட்சி மற்றும் போலீசாரின் அனுமதியின்றி நேற்று மாலை பாரதீய ஜனதா கட்சியினர் கொடிக்கம்பம் அமைத்தனர். தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் விரைந்து வந்து அந்த கொடி கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி கொடி கம்பத்தை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கொடி கம்பம் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
Related Tags :
Next Story