கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
துவரங்குறிச்சி பஸ் நிலையம் எதிரே கடைவீதி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் அனைத்தும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் துர்நாற்றம் வீசியதுடன், நோய் பரவும் அபாயமும் இருந்து வந்தது. கடைவீதி பகுதிகளில் கழிவுநீர் செல்லும் பாதையை கடைகள் வைத்து ஆக்கிரமித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற பொன்னம்பட்டி பேரூராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.பின்னர் நேற்று காலை பொன்னம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் தலைமையில் கழிவு நீர் கால்வாய் செல்லும் பாதையில் அடைப்புகளை பொக்லைன் எந்்திரம் மற்றும் பணியாளர்கள் மூலம் அகற்றும் பணி தொடங்கியது.துவரங்குறிச்சி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே கால்வாயை சுத்தம் செய்து, விரைவில் கால்வாய் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.