குளத்தில் செத்து மிதந்த மீன்கள் அகற்றம்
குளத்தில் செத்து மிதந்த மீன்கள் அகற்றப்பட்டது.
விராலிமலையிலிருந்து கீரனூர் செல்லும் சாலையில் அம்மன் குளம் உள்ளது. இக்குளத்தை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கிய இக்குளத்தில் தொடர்ந்து கழிவுநீர் மற்றும் நச்சு கழிவுகள் கலப்பதால் குளத்தின் நீரானது மாசடைந்து அதில் இருந்த மீன்கள் செத்து மிதந்தன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கழிவு நீர் மற்றும் நச்சு கழிவுகளை கொட்டி குளத்து நீரை மாசடைய செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா். இந்த ெசய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக நேற்று காலை விராலிமலை ஊராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு குளத்தில் செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இனிவரும் காலங்களில் குளத்து நீரை மாசுபடுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறியும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்தனர்.