காய்ந்த மற்றும் கீழே விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் - சென்னை மாநகராட்சி


காய்ந்த மற்றும் கீழே விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் - சென்னை மாநகராட்சி
x

காய்ந்த மற்றும் கீழே விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில தினங்களாக அவ்வப்போது கன முதல் மிதமான மழை பெய்கின்றது. அப்போது திடீரென மரங்கள் விழுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

இந்த விபத்துகளால் சில நேரங்களில் பொதுமக்களுக்கு காயங்களும், சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. நேற்று இரவு கூட சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் காய்ந்த மற்றும் கீழே விழும் நிலையில் உள்ள மரங்கள்,மரக்கிளைகளை அகற்ற வேண்டும் எனவும்,மரங்கள் கீழே விழுந்தால் அப்புறப்படுத்த தேவையான எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.


Next Story