ஊட்டி அரசு தாவரவியல் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையோர ஆவிரம்பு கடைகள் அகற்றப்பட்ட விவகாரத்தில், வியாபாரிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஊட்டி
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையோர ஆவிரம்பு கடைகள் அகற்றப்பட்ட விவகாரத்தில், வியாபாரிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் 100-க்கும் மேற்பட்ட சாலையோர நடைபாதை கடைகள் இருந்தன. இந்த நிலையில் நடைபாதையில் கடைகள் இருப்பதால் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருப்பதாக கூறி நகராட்சி நிர்வாகம் சார்பில் அவர்களது கடைகளை காலி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி பொக்லைன் எந்திரம் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி நிர்வாகத்தினர் கடைகளை அகற்றினர். அப்போது வியாபாரிகள் நகராட்சி நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து நேற்று சிறு வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட வியாபாரிகள் கூறியதாவது:-
பிச்சை எடுக்கும் போராட்டம்
50 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் இந்த பகுதியில் கடை நடத்தி வருகிறோம். இந்த நிலையில் தற்போது திடீரென கடைகளை காலி செய்வதால் எங்களது வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கடைகளை நம்பி நாங்கள் வங்கியில் கடன் வாங்கி உள்ளோம். தற்போது அந்த கடனை எவ்வாறு கட்டுவது என்று தெரியவில்லை. எனவே எங்களுக்கு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் கடைகள் அமைக்க அனுமதி தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளோம். மேலும் இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வு காண விட்டால் தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.