ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம்


ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம்
x

வெண்ணந்தூரில் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.

நாமக்கல்

வெண்ணந்தூர்

வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லூர் மெயின் ரோட்டில் பழமை வாய்ந்த தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்தநிலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி, இவரது மகன் கோவிந்தசாமி ஆகிய 2 பேரும் கோவில் நிலத்தில் கட்டிடங்கள் கட்டி கோவிலுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்தனர். இந்த நிலையில் அந்த கட்டிடத்தை அப்புறப்படுத்த கோவில் நிர்வாகம் கூறியும் அவர்கள் மறுத்து வந்தனர். இதையடுத்து ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ள இடத்தை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். இதன்பேரில் நாமக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் கோவிலுக்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி கோவில் நிலத்தை கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். இதில் வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, ராசிபுரம் மண்டல துணை வட்டாட்சியர் மேகநாதன், வெண்ணந்தூர் வருவாய் ஆய்வாளர் உலகநாதன், ராசிபுரம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கீதாமணி மற்றும் கோவில் நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story