புத்தூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
புத்தூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
வேலூர்
காட்பாடி தாலுகா புத்தூர் கிராமத்தில் நரிக்குறவர்கள், இருளர்கள் உள்பட 130 பேருக்கு இலவச வீட்டு மனைபட்டா அரசு சார்பில் வழங்கப்பட்டு இருந்தது. பட்டா வழங்கப்பட்ட 6 பேரின் இடங்களில் சிலர் பயிரிட்டு ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் பட்டாதாரர்கள் பட்டா இடத்தில் வீடு கட்ட முடியாமல் அவதிப்பட்டனர். இது குறித்து பட்டாதாரர்கள் காட்பாடி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து ஆக்ரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.
அப்போது காட்பாடி மண்டல துணை தாசில்தார் சாதிக், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story