சிவந்திபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்


சிவந்திபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
x

சிவந்திபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திபட்டி அண்ணா தெருவில் டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியின் பின்புறம் அரசுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் அதனை பொதுப்பாதைக்கு பயன்படுத்த வேண்டும் என்று சிவந்திப்பட்டி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் கலெக்டருக்கு அனுப்பப்பட்டது. மாவட்ட கலெக்டர், உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டார். அவர் நடத்திய விசாரணையில் பஞ்சாயத்து தீர்மானம் அடிப்படையில் பாதையாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

இதனையடுத்து நேற்று பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ்.தங்கபாண்டியன், சிவந்திப்பட்டி பஞ்சாயத்து தலைவி பெருமாத்தாள் ஆகியோர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அப்போது, பாளையங்கோட்டை துணை தாசில்தார் கிரேசி, வருவாய் ஆய்வாளர் கணபதியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் அனந்தராமகிருஷ்ணன், சிவந்திபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் உள்ளிட்டவர்கள் உடன் சென்றனர்.


Next Story