மரூர் பாப்பான்தாங்கல் ஏரி ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்


மரூர் பாப்பான்தாங்கல் ஏரி ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்
x

மரூர் பாப்பான்தாங்கல் ஏரி ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்:

ரிஷிவந்தியம் ஒன்றியம் மரூர் பாப்பான்தாங்கல் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் செல்லும் ஓடையை சில விவசாயிகள், ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இதனால் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற முடியாமல் ஓடை கரை உடைந்து விளைநிலத்திற்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது.

இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் முருகனிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்த ஊராட்சி மன்ற தலைவர் உஷாராணி மணிகண்டன், துணை தலைவர் பொம்மி குபேந்திரன், ஊராட்சி செயலாளர் பரிசன் ஆகியோர் ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செயதனர். அதன்படி 3 ஏக்கர் பரப்பளவை ஆக்கிரமித்து சாகுபடி செய்திருந்த பயிர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அழிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஓடை முழுமையாக தூர்வாரப்பட்டது.


Next Story