பயணிகள் நிழற்கூடம் அமைக்க ஆக்கிரமிப்பு அகற்றம்


பயணிகள் நிழற்கூடம் அமைக்க ஆக்கிரமிப்பு அகற்றம்
x

பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

வேலூர்

பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்காக தனி நபரிடம் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் சார்பில் இடம் கேட்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தை தனி நபர் வழங்காமல் 10 ஆண்டு காலமாக காலம் கடத்தி வந்ததோடு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு தொடர்ந்ததால் பயணிகள் நிழற்கூடம் கட்டும் பணி நடைபெற வில்லை.

இந்த நிலையில் பொதுமக்கள் நலனுக்காகவும், நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காகவும் தனிநபர் அந்த இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், தேசிய நெடுஞ்சாலைத் துறை தனி தாசில்தார் தலைமையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தன. அப்போது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நபர் இரண்டு நாள் அவகாசம் கேட்டதாகவும், அவரே முன்வந்து இடத்தை காலி செய்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து வருவாய்த்துறையினர் அருகிலுள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். மண்டல துணை தாசில்தார், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையரக பொறியாளர், மற்றும் பள்ளி கொண்டா நில அளவர், வருவாய் ஆய்வாளர், பள்ளி கொண்டா போலீசார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story