ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

போளூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன

திருவண்ணாமலை

போளூர்

போளூரில் கடலூர்-சித்தூர் நெடுஞ்சாலையில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அண்ணா பூங்காவில் இருந்து பெரிய ஆஞ்சநேயர் கோவில் வரை சாலையின் 2 பக்கங்களில் 700 மீட்டர் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.

உதவி கோட்ட பொறியாளர் வி.கோவிந்தசாமி தலைமையில், உதவி பொறியாளர் வெங்கடேசன், சாலை ஆய்வாளர்கள் விஸ்வநாதன், கார்த்திகேயன் மற்றும் சாலை பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், சங்கர், பாஷ்யம் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சில இடங்களில் கடை உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.


Next Story