ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

முதுகுளத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் பேரூராட்சியில் ரூ.6 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைத்துறை மூலம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியானது 60 சதவீதம் முடிந்துள்ள நிலையில் கழிவுநீர் கால்வாயில் மேற்புறத்தில் பொதுமக்கள் நடமாடும் வகையில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதை வியாபாரிகள் அவரவர் கடைக்கு முன்பு நடை பாதையை ஆக்கிரமிப்பு செய்ததாக முதுகுளத்தூர் பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறைக்கும் தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில் முதுகுளத்தூர் பேரூராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையெடுத்து சில கடைக்காரர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மேற்பார்வையில் முதுகுளத்தூர் கடை வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத கடைகளின் பந்தல்கள் நடை பாதையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் விளம்பர பதாகைகளை பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மூலம் போலீசார் உதவியுடன் அகற்றினர்.


Next Story