ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே தர்மபட்டி ஊராட்சியில் உள்ள மேகாடு கிராம பகுதியில் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு பொது பாதை வசதி இல்லாமல் தனிநபர் இடத்தின் வழியாக சென்று வந்தனர். தனிநபர் இடம் அடைக்கப்பட்டதை தொடர்ந்து பாதை வசதி இல்லாமல் இப்பகுதி மக்கள் தவித்து வந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொது பாதை வசதி வேண்டி மனு கொடுத்தனர். மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் சிங்கம்புணரி தாசில்தார் சாந்தி இடத்தை பார்வையிட்டு, தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த தர்மபட்டி சாத்தன கண்மாய் இடங்களை மீட்டு பொதுபாதை வசதி செய்து கொடுத்தார். இதில் வாராப்பூர் வருவாய் ஆய்வாளர் மோகன், சர்வேயர் மாரிமுத்து, உலகம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம், கிராம நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன், உதவியாளர்கள் கணபதி, பழனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர். பாதை வசதி ஏற்படுத்தி கொடுத்த சிங்கம்புணரி தாசில்தார் சாந்திக்கு இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.