வரத்து வாரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்


வரத்து வாரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

வரத்து வாரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

புதுக்கோட்டை

ஆலங்குடி:

ஆலங்குடி தாலுகா புதுக்கோட்டைவிடுதி ஊராட்சி கும்மங்குளத்தில் தனிநபர் ஒருவர் குளத்திற்கு வரத்து வாரியை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர்,ஆலங்குடி தாசில்தாரிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் தாசில்தார் செந்தில்நாயகி தலைமையில், புதுக்கோட்டை விடுதி கிராம நிர்வாக அலுவலர்கள் வீரமுத்து, மாரீஸ்வரன் மற்றும் ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணு, மண்டல வட்ட துணை தாசில்தார் பழனியப்பன், ஆலங்குடி போலீசார், கிராம மக்கள் முன்னிலையில் வரத்து வாரி ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.


Next Story