ஆலங்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஆலங்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

ஆலங்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

புதுக்கோட்டை

ஆலங்குடி தாலுகா கே.வி. கோட்டை ஊராட்சி உருமநாதபுரம் கிராமம் பஸ் நிறுத்தம் அருகில் 17 ஏக்கர் நிலம் வருவாய்த்துறை கணக்கில் கோவில் இடமாக உள்ளது. இந்த இடத்தில் தவளைப்பள்ளம், பாத்திமாநகர், உருமநாதபுரம், அரசடிப்பட்டி, எம்.ஜி.ஆர். நகர் ஆகிய கிராமத்தில் உள்ள நபர்கள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்தும் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மழவராயன்பட்டி கிராமத்தை சேர்ந்த மழவராயர் சமூக அறக்கட்டளை தலைவர் மீனாட்சி சுந்தரம் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் 17 ஏக்கர் நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக கூறி 2021-ம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை பரிசீலனை செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை மற்றும் ஆலங்குடி தாசில்தாரும் உரிய பரிசீலனை செய்து ஆக்கிரமிப்பை அகற்றும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கிணறுகள் மற்றும் தென்ன மரங்கள் உள்ளிட்ட ஆக்கிரமித்திருந்த அனைத்தையும் ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர். அப்போது ஆலங்குடி வட்ட துணை தாசில்தார் பழனியப்பன், வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story