அசம்புரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


அசம்புரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

அரசு பஸ்-டெம்போ உரசிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து நாகர்கோவில் வடசேரி அசம்பு ரோட்டில் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

அரசு பஸ்-டெம்போ உரசிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து நாகர்கோவில் வடசேரி அசம்பு ரோட்டில் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.

போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது அகற்றப்பட்டு வருகிறது. கடத்த சில நாட்களுக்கு முன்பு ராஜாக்கமங்கலம் ரோடு, வடசேரி ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

நேற்று முன்தினம் அசம்புரோட்டில் சென்ற அரசு பஸ் மீது டெம்போ உரசி வெளியே செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இந்தநிலையில் நேற்று அசம்பு ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. பொக்லைன் எந்திரம் மூலமாக அண்ணா சிலை முதல் புத்தேரி மேம்பாலம் வரை அகற்றப்பட்டன. அந்த வகையில் கடையின் முன்பு நீட்டி போடப்பட்டிருந்த ஷட்டர்கள், படிக்கட்டுகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும் மழைநீர் வடிகால் மேல் போடப்பட்டு இருந்த ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டன.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், நகர அமைப்பு ஆய்வாளர் மகேஷ்வரி ஆகியோர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.


Next Story