பேய்க்குளம் பஜாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பேய்க்குளம் பஜாரில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தட்டார்மடம்:
பேய்க்குளத்தில் நெடுஞ்சாலைத்துறையினருக்கு சொந்தமான இடங்கள் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருந்து வருவதாக தூத்துக்குடி லோக் அதாலத் மக்கள் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை பரிசீலனை செய்த மக்கள் நீதிமன்றம் அப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்ய சாத்தான்குளம் வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. இதன் பேரில் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களை அந்த அதிகாரிகள் முன்னிலையில் அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். இதன்அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்த கடை உரிமையாளர்களுக்கு மூன்று முறை எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பேய்குளம் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.