நாகை நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


நாகை நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகை நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அதிகாரிகள் நடவடிக்கை

நாகப்பட்டினம்


நாகை டவுன் பகுதியை அழகுபடுத்தும் வகையில் நகராட்சி ஆணையர் (பொ) சங்கர் உத்தரவின் பேரில் நாகை புதிய ஆர்ச் முதல் நாகூர் வெட்டாறு வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. நகரமைப்பு அலுவலர்கள் நாகராஜன், காஜாமொய்தீன் ஆகியோர் தலைமையில் பொக்லின் எந்திரம் கொண்டு நகர பகுதியில் ஆக்கிரமிப்பு செய்திருந்த இடங்களை அகற்றினர்.

இந்த நிலையில் நாகை அரசு ஆஸ்பத்திரி வாசலிலும், அபிராமி அம்மன் சன்னதி தெருவில் நாகை நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடை வைத்திருப்பது ஆக்கிரமிப்பை அகற்றும் போது தெரியவந்தது. இதையடுத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றியவுடன் நாகை நகர பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கும், ஒருவழிபாதையாக மாற்றுவதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

அதே போல் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பூங்காக்கள் அமைத்து நகராட்சியை அழகுபடுத்த திட்டம் வகுக்கப்படவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story