பெரியகுளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


பெரியகுளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

விராலிமலை அருகே பெரியகுளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

புதுக்கோட்டை

விராலிமலை:

அறிவிப்பு நோட்டீஸ்

வட கிழக்கு பருவ மழை தொடங்க இருப்பதாலும், ஏற்கனவே நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதன் அடிப்படையிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய் துறையினர் உதவியுடன் அந்தந்த கிராமங்களில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து அதில் ஆக்கிரமிப்பு உள்ள இடங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறைப்படி அறிவிப்பு நோட்டீஸ் கொடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்து வந்தனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விராலிமலை தாலுகா மீனவேலி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரியகுளம் உள்ளது. இக்குளத்தில் சுமார் 2 எக்டேர் நிலத்தை அப்பகுதியை சேர்ந்த 34 பேர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். மேலும் பெரியகுளத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்த நபர்களுக்கு ஆக்கிரமிப்பை அகற்றும்படி கடந்த 20 நாட்களுக்கு முன்பு அறிவுப்பு நோட்டீஸ் வருவாய்த்துறை சார்பில் கொடுக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு கால அவகாசம் கொடுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் நேற்று பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கார்த்திக் மற்றும் விராலிமலை தாசில்தார் சதீஸ் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றினர். இதில் 7 பேர் அறிவிப்பு நோட்டீஸ் கொடுத்த பிறகும் விவசாயம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story