பிள்ளபாளையம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


பிள்ளபாளையம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

பிள்ளபாளையம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

கரூர்

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பிள்ளபாளையம் ஊராட்சி குடியிருப்பு பகுதியில் விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய பொது பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து குறுக்கே காம்பவுண்ட் சுவர் எழுப்பியிருந்தார். இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு செல்ல முடியாமல் இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதையடுத்து நேற்று கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை பொக்லைன் எந்திரத்தின் மூலம் அகற்றினர். இதில், ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளி, ஊராட்சி செயலாளர் ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து பொதுப்பாதை பொதுமக்களின் பயன்பாட்டிக்கு வந்தது.


Next Story