ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

புதுக்கோட்டை

கோட்டைப்பட்டினம்:

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா மூவனூர் அருகே உள்ள பாக்கம் ஏரியில் அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் இடத்ைத தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கொட்டகை அமைத்து வருவதாக வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு புகார் வந்துள்ளது. புகாரையடுத்து நேற்று வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, அங்கு எண்ணற்ற நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினார். ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பின் போது, பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் ராஜராஜன், மண்டல துணை வட்டாட்சியர் முத்துக்கனி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர் உள்ளிட்டோர் இருந்தனர்.


Next Story