மயானத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வெள்ளக்கொள்ளை கிராமத்தில் மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.
தாசில்தாரிடம் புகார்
ஆலங்குடி அருகே சேந்தாக்குடி ஊராட்சியில் வெள்ளக்கொள்ளை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மயானத்திற்காக இடம் உள்ளது. இந்த இடத்தை தனி நபர் ஒருவர் திடீரென்று ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதுகுறித்து ஒரு பிரிவினர் ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று மயானத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து புகார் கூறினார்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இதையடுத்து ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தலைமையில், வட்ட துணை தாசில்தார் பழனியப்பன், வெண்ணவல்குடி வருவாய் ஆய்வளர் குப்புசாமி, சேந்தாக்குடி, பாலையூர், வெண்ணவால்குடி கிராம நிர்வாக அதிகாரிகள் சுப உலகநாதன், கார்த்திகையன், கணேசன் மற்றும் அதிகரிகள் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் மயானத்திற்கு உட்பட்ட இடத்தை அளந்து அடைக்கப்பட்டிருந்த முள்வேலிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை ஆலங்குடி போலீசார் பாதுகாப்புடன் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.