நான்கு வழிச்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


நான்கு வழிச்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

நெல்லை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

திருநெல்வேலி

நெல்லை -தூத்துக்குடி நான்கு வழிச்சாலை தொடங்கும் பகுதியான பாளையங்கோட்டை கே.டி.சி நகர் மேம்பாலம் அருகே சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. இங்குள்ள கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தன.

அவற்றை நேற்று தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு ஷெட்டுகள், மண் மேடுகள், படிக்கட்டுகள் ஆகியவற்றை அகற்றினார்கள். அப்போது வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story