அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நெகமம்

கிணத்துக்கடவு ஒன்றியம் பெரியகளந்தை ஊராட்சி நாராயணநாயக்கன்புதூரில் ஞானராஜ் என்பவர் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து குடோன் கட்டியதாக கூறப்படுகிறது. இதை அகற்றக்கோரி பெரியகளந்தை ஊராட்சி நிர்வாகம் பலமுறை கூறியும் கேட்கவில்லை.

இதையடுத்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய மனுவை, கோவை மாவட்ட கலெக்டரிடம், பெரியகளந்தை ஊராட்சி மன்ற தலைவர் ஆதீஸ்வரன் வழங்கினார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க கிணத்துக்கடவு தாசில்தாரிடம் பரிந்துரைக்கப்பட்டது. தொடர்ந்து கிணத்துக்கடவு தாசில்தார் குமார் தலைமையில் வடசித்தூர் வருவாய் ஆய்வாளர் வித்யா, பெரியகளந்தை கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் கேசவமூர்த்தி, ராமலிங்கம், குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.


Next Story