ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; விவசாயிகள் வலியுறுத்தல்


ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; விவசாயிகள் வலியுறுத்தல்
x

ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு செயலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் வேளாண்மை அலுவலர் அன்பழகன், தாசில்தார் சரளா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் திருவண்ணாமலை தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது, ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கும், கூட்டத்தில் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கும் அதிகாரிகள் உரிய பதில் அளிக்க வேண்டும். அரசு திட்டங்கள் முறையாக விவசாயிகளுக்கு சென்றடைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வழக்கமாக தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும். ஆனால் சமீப மாதங்களாக தலைமை வகிக்கும் அதிகாரிகள் மாறி, மாறி வருகின்றனர்.

விவசாயிகள் கூட்டத்தில் பேசுவதை ராமாயணம், மகாபாரதம் கேட்பது போன்று அதிகாரிகள் கேட்டுவிட்டு செல்கின்றனர். எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


Next Story