இந்து முன்னணி கொடிக்கம்பம் அகற்றம்


இந்து முன்னணி கொடிக்கம்பம் அகற்றம்
x

ஏலகிரி மலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட இந்து முன்னணி கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.

திருப்பத்தூர்

ஏலகிரி மலையில் இந்து முன்னணி சார்பில் மாநில நிர்வாகிகள் கூட்டம் கடந்த 28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெற்றது. நிறைவு விழாயொட்டி அத்தனாவூர்- புங்கனூர் சாலையில் படகு சவாரி இல்லம் அருகில் இந்து முன்னணி சார்பில் புதிய கொடிக் கம்பம் அமைத்து கொடியேற்றினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் சீனிவாசன் சென்று அனுமதியின்றி நெடுஞ்சாலையில் கொடிக்கம்பம் வைத்துள்ளதாக ஏலகிரி மலை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று இந்து முன்னணி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ஏலகிரி மலை கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று அனுமதியின்றி வைத்ததாக கொடிக்கம்பத்தை அகற்றினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.


Next Story