சுவரொட்டிகள் அகற்றம்


சுவரொட்டிகள் அகற்றம்
x

விதிகளை மீறி கும்பகோணம் தலைமை ஆஸ்பத்திரி சுவரில் ஒட்டப் பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டது.

தஞ்சாவூர்

விதிகளை மீறி கும்பகோணம் தலைமை ஆஸ்பத்திரி சுவரில் ஒட்டப் பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டது.

சுவரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் நாகை, திருவாரூர், அரியலூர், ஜெயங்கொண்டம், கடலூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளிலிருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் இருந்து வருகின்றனா். இந்த ஆஸ்பத்திரியின் சுவரில் உரிய அனுமதியின்றி தேவையற்ற சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு வருகிறது.

இந்த சுவரொட்டிகள் அடிக்கடி கிழிக்கப்பட்டு சாலையில் கிடப்பதால் அந்தப்பகுதி முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. சுவரொட்டிகள் ஒட்டுவதால் சுவற்றின் உறுதி தன்மை மற்றும் தரம் ஆகியவை பாதிக்கும் வகையில் இருந்தது. இதனால் இந்த சுவரொட்டிகளை அகற்றவும், இனி ஒட்டாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அகற்றம்

அதன்படி ஆஸ்பத்திரி ஊழியர்கள் நேற்று சுவரில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை அகற்றினர். இதுகுறித்து ஆஸ்பத்திரி அதிகாரிகள் கூறுகையில், ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் சுற்று சுவரில் ஆஸ்பத்திரி- மருத்துவம் சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று விதிமுறைகள் ஏற்கனவே உள்ளன. ஆனால் கும்பகோணம் தலைமை அரசு ஆஸ்பத்திரி சுவரில் தேவையற்ற அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது. ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் உத்தரவின் படி அகற்றப்பட்டுள்ளன. இனிமேல் சுவரொட்டிகளை யாராவது ஒட்டினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றனர்


Next Story