ஊட்டியில் சுவரொட்டிகள் அகற்றம்
ஊட்டியில் சுவரொட்டிகள் அகற்றப்பட்டது.
ஊட்டி,
ஊட்டி நகராட்சி சார்பில், மக்களுக்கான தூய்மை இயக்கத்தின் படி மாதந்தோறும் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் நகர் பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி பூங்காக்கள், பள்ளி வளாகங்கள், பஸ் நிறுத்தங்கள், மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்களில் தூய்மைப் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் ஆணையாளர் காந்திராஜன் உத்தரவின் பேரில் சுவரொட்டிகள் மற்றும் பேனர்களை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சுவரொட்டிகளை கிழித்து அகற்றினர். ஊட்டி நகராட்சி மார்க்கெட், பிங்கர்போஸ்ட், கோடப்பமந்து, அப்பர் பஜார், லோயர் பஜார் உள்பட பல இடங்களிலும் நடந்தது. முன்னதாக பணியாளர்கள் தூய்மை பணிகளை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் சுவர்களில் போஸ்டர் ஒட்ட வேண்டாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.