பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்


பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
x

சாத்தான்குளத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் பேரூராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட பூங்கா தெருவில் அதே தெருவைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் உள்ள பொதுப்பாதையை ஆக்கிரமித்து சுவர் எழுப்பி இருந்தார். இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் அப்பகுதியில் மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமையில் சாத்தான்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, வருவாய் ஆய்வாளர் பாலகங்காதரன், வட்ட சார் ஆய்வாளர் முருகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றினர்.


Next Story