சாத்தான்குளம் அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்


சாத்தான்குளம் அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
x

சாத்தான்குளம் அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் யூனியன் எழுவரைமுக்கி பஞ்சாயத்து தோப்பூரில் இருந்து நாசரேத் மில்லுக்கு செல்லும் பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

இதையடுத்து அந்த நிலத்தை வருவாய்த்துறையினர் அளவீடு செய்தனர். இதில் கடந்த 15 ஆண்டுகளாக பொதுப்பாதை ஆக்கிரமிப்பில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் அகற்றினர்.


Next Story