சாலையில் தேங்கிய மழைநீர் அகற்றும் பணி


சாலையில் தேங்கிய மழைநீர் அகற்றும் பணி
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி நகர் பகுதியில் சாலையில் தேங்கிய மழைநீர் அகற்றும் பணி நடைபெற்றது.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சீர்காழி நகராட்சி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், சிதம்பரம் சாலை, ஈசானியதெரு, ெரயில்வே ரோடு, தேர் தெற்கு வீதி, தேர் கீழ் வீதி உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதையடுத்து சாலையில் தேங்கிய மழை நீரினை நகராட்சி சார்பில் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்தது. அந்த பணியை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை பார்வையிட்டு அதை அகற்ற வேண்டும் என அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் அர்ச்சனா, சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர் மன்ற உறுப்பினர்கள் முபாரக்அலி, கலைச்செல்வி மதியழகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story