சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
புவனகிரியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கடலூர்
புவனகிரி,
புவனகிரி நகரில் சாலையை ஆக்கிரமித்து தனிநபர்கள் சிலர் கடைகள் மற்றும் வீடுகள் கட்டியிருந்தனர். இதனால் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பரமேஸ்வரி தலைமையில் புவனகிரி தாசில்தார் ரம்யா, உதவி பொறியாளர் வினோத் வெங்கடேஷ், இளநிலை பொறியாளர் ஜெகன் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அப்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story