சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

மேலப்பாளையத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியாமல் திணறி வருகின்றனர். ஓரளவுக்கு தீர்வு காணும் முயற்சியாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி கடந்த சில நாட்களாக வண்ணார்பேட்டை மேம்பாலத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மேலப்பாளையத்தில் இருந்து அம்பை செல்லும் ரோட்டின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மேலப்பாளையம் மண்டல அலுவலர்கள், ஊழியர்கள் ஈடுபட்டனர்.

100-க்கும் மேற்பட்ட கடைகள் முன்பு போடப்பட்டிருந்த முகப்பு பந்தல்கள், ஷெட்டுகள் அகற்றப்பட்டன. பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. ஒருசில கடைக்காரர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். ஒருசில வியாபாரிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.


Next Story