மின்வினியோகத்திற்கு இடையூறாக இருந்த மரங்கள் அகற்றம்
பூம்புகார் ஊராட்சியில் மின்வினியோகத்திற்கு இடையூறாக இருந்த மரங்கள் அகற்றம்
மயிலாடுதுறை
திருவெண்காடு:
பூம்புகார் ஊராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் மின்சாரம் செல்லும் கம்பிகளின் மேல் மரங்கள், கிளைகள் இடையூறாக காணப்பட்டது. இதனால் சிறிது மழை பெய்தாலே கம்பிகள் அறுந்து மின்வினியோகம் தடைபட்டது. இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பவல்லி ராஜாவிடம் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று பழுது நீக்கம் காரணமாக மின்தடை என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று தர்ம குலம், வெள்ளையன் இருப்பு தெரு, பெருமாள் கோவில் தெரு, மேலையூர், சாயாவனம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து இருபதுக்கு மேற்பட்ட ஊராட்சி பணியாளர்கள், தொழிலாளர்கள் மின் வினியோகத்திற்கு இடையூறாக இருந்த மரங்கள் மற்றும் அதன் கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இச்செயலுக்கு அந்த பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story