அனுமதி பெறாத தெருக்களின் பெயர் பலகைகள் அகற்றம்
குற்றாலம் பேரூராட்சி பகுதியில் அனுமதி பெறாத தெருக்களின் பெயர் பலகைகள் அகற்றப்பட்டன.
தென்காசி
குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தில் அனுமதி பெறாமல் 16 தெருக்களில் அரசியல் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்களின் பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இதுபோன்று நிர்வாக அனுமதி பெறாமல் பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருந்தால் அதனை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குற்றாலத்தில் 16 தெருக்களில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் நேற்று அகற்றப்பட்டன. இந்த பணியில் குற்றாலம் பேரூராட்சி சுகாதார அலுவலர் ராஜகணபதி மேற்பார்வையில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story