பாலத்தின் அடியில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றம்
திருவாரூரில் பாலத்தின் அடியில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றம்
திருவாரூர்
திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஓடம்போக்கி ஆற்று பாலத்தின் வழியாக நகர் பகுதிக்கு செல்பவர்கள் மட்டுமின்றி மயிலாடுதுறை, நன்னிலம், காரைக்கால் போன்ற பல பகுதிக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலத்தின் அடியில் செடிகள் வளர்ந்து உள்ளதால் பாலத்தின் உறுதித்தன்மை கெட்டுவிடும் நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று திருவாரூர் கோட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பொக்லின் எந்திரத்துடன் ஓடம்போக்கி ஆற்றுபாலத்திற்கு வந்தனர். அங்கு பொக்லின் எந்திரத்தின் பக்கெட்டில் ஊழியர்கள் அமர வைத்து பாலத்தின் அடி பகுதியில் இருந்த செடிகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.
Related Tags :
Next Story