பொதுமக்களுக்கு இடையூறாக ேபாடப்பட்ட இரும்பு கேட் அகற்றம்
போளூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக ேபாடப்பட்ட இரும்பு கேட் அகற்றப்பட்டது.
திருவண்ணாமலை
போளூர்
போளூர் அருகே கோரால்பாக்கம் கிராமத்தை சார்ந்த பழனி என்பவர் கரைப்பூண்டி கிராமத்தில் ஏரி கால்வாய் புறம்போக்கில் பொதுமக்களுக்கு இடையூறாக இரும்பு கேட் அமைத்திருந்தார்.
இதுகுறித்து கிராம மக்கள் தாசில்தாரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து தாசில்தார் சண்முகம் தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் இடையூறாக இருந்த இரும்பு கேட் அகற்றப்பட்டது.
அப்போது மண்டல துணை தாசில்தார்கள், தட்சிணாமூர்த்தி, வட்ட துணை ஆய்வாளர் சரவணன், வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர் அபிமன்னன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story